உள்ளடக்கத்துக்குச் செல்

திற்பரப்பு அருவி

ஆள்கூறுகள்: 8°23′29″N 77°15′34″E / 8.391339°N 77.259429°E / 8.391339; 77.259429
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திற்பரப்பு அருவி
திற்பரப்பு அருவி is located in தமிழ் நாடு
திற்பரப்பு அருவி
அமைவிடம்திற்பரப்பு, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறு8°23′29″N 77°15′34″E / 8.391339°N 77.259429°E / 8.391339; 77.259429
ஏற்றம்86 மீட்டர்
மொத்த உயரம்50 அடி[1]
சராசரி அகலம்300 அடி
நீர்வழிகோதையாறு

திற்பரப்பு நீர்வீழ்ச்சி என்பது (ஆங்கில மொழி: Tirparappu Waterfalls) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக இந்து சமய நம்பிக்கை உள்ளது. கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது[2].

திற்பரப்பு அணை

[தொகு]

திற்பரப்பு அணை கோதையாறு திட்டத்தின் கீழ் 1951-இல் திற்பரப்பில் கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணையால் 358.9 கெக்டேர் நிலப்பரப்பு பாசனம் அடைகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tirparappu Waterfall
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!". News18 Tamil. 2022-11-30. பார்க்கப்பட்ட நாள் 2023-08-26.
  2. "நாஞ்சில் ஆன்லைன்". Archived from the original on 2011-07-14. பார்க்கப்பட்ட நாள் 2011-03-05.


"https://ta.wikipedia.org/w/index.php?title=திற்பரப்பு_அருவி&oldid=4080809" இலிருந்து மீள்விக்கப்பட்டது